ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக எஸ்.ஆர்.ஹெச் கேப்டன் இஷான் கிஷன் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஆச்சரியமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய இஷான், தனது அணியில் சேர்க்க விரும்பும் ஒரு வீரராக வைபவ் சூர்யவன்ஷியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
வைபவின் அதிரடியான பேட்டிங் முறையும், அவர் ஆட்டத்தை அணுகும் விதமும் ஹைதராபாத் அணியின் பாணிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று இஷான் கிஷன் புகழ்ந்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தால் அவரால் இன்னிங்ஸைத் சிறப்பாகத் தொடங்க முடியும் என்றும், அவர் தொடர்ந்து ரன்கள் குவிப்பது அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் இஷான் குறிப்பிட்டுள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
இதற்கிடையில், வைபவின் பயிற்சியாளர் மனிஷ் ஓஜா கூறுகையில், இஷான் மற்றும் வைபவ் இருவருமே பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே சுவாரஸ்யமான போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வைபவின் உயரம் அவருக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்றும், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் இஷான் கிஷன் ஒரு பெரிய சவாலாக விளங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
