தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவத்திற்கு, தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சினிமா என்பது பலரின் நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உருவாவது என்றும், இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்தத் திரையுலகையுமே பாதிக்கும் என்றும் அவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், ‘ஜனநாயகன்’ படக்குழுவினருக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஜீவா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தின் லீக் விவகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த நிலையில், தற்போது சிரஞ்சீவியும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
