தளபதி விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய சோதனையைச் சந்தித்துள்ளது.
படத்தின் சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்கனவே சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது படத்தின் மிக முக்கியமான அறிமுகக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகள் என சுமார் 5 நிமிட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ள இயக்குனர் எச்.வினோத், “ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் பெரும் கனவைச் சுமந்து நிற்கிறது, தயவுசெய்து லீக் ஆன வீடியோக்களைப் பகிராமல் படத்திற்கு ஆதரவு தாருங்கள்” எனக் கண்ணீர்மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் விஜய், தனது படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது காட்சிகள் கசிந்துள்ளது தவெக தொண்டர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தைத் திருட்டுத்தனமாக வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
