உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பாபு பூர்வா பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக மின்தூக்கி அறுந்து விழுந்ததில் மணமகனின் சகோதரர் படுகாயமடைந்தார். அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் வலீமா விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சமையல் பணிகளுக்காக மூன்றாம் தளத்திலிருந்து விறகு கட்டைகளை ஏற்றிக்கொண்டு மணமகனின் சகோதரர் ஜைனுல் என்பவர் லிஃப்ட் மூலம் கீழே இறங்கியுள்ளார்.
மேலும் அப்போது எதிர்பாராத விதமாக லிஃப்டின் கம்பி அறுந்ததால், அது நேராக தரைதளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஜைனுல், உடனடியாக மீட்கப்பட்டு ஹேலட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
हादसा भयावह है!
मैरिज हॉल में शादी थी. सिलेंडर की कमी के चलते लकड़ी का इस्तेमाल किया जा रहा था. दूल्हे का भाई लड़की लादकर लिफ्ट से नीचे उतर रहा था. लेकिन अचानक लिफ्ट का तार टूट गया.
और लिफ्ट सीधे नीचे आ गिरी. जिसमें दूल्हे का भाई गंभीर रूप से घायल हो गया. और यह पूरा हादसा… pic.twitter.com/S3YI6gAtWB
— Priya singh (@priyarajputlive) April 8, 2026
“>
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கான்பூர் போலீசார், திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட அந்த லிஃப்டில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருமண விழா இந்த விபத்தினால் பெரும் சோகத்தில் முடிந்தது.
