நெல்லை தேர்தல் பிரசார மேடையில், தனக்கு எதிராக நடத்தப்படும் அரசியல் சூழ்ச்சிகளைப் பட்டியலிட்டு அதிரடி காட்டினார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். “முதலில் கரூர் வதந்தியை பரப்பினார்கள், அப்புறம் எனது படங்களை முடக்கப் பார்த்தார்கள், கடைசியாக ‘SOP’ என்று எனக்கு மட்டும் தனி விதிகளைப் போட்டார்கள்” எனத் தனக்கு எதிராக ஏவப்பட்ட அடுக்கடுக்கான நெருக்கடிகளைப் பொதுமேடையில் போட்டுடைத்தார்.

​இத்தனை தடைகளைத் தாண்டியும் மக்கள் சக்தியாகத் தன் பக்கம் நிற்பது எதிரிகளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பதாகக் கூறிய அவர், எத்தனை அவதூறுகள் மற்றும் சதித் திட்டங்கள் வந்தாலும் மக்கள் சக்தியை யாராலும் பிரிக்க முடியாது எனப் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார். விஜய்யின் இந்தத் தைரியமான பேச்சு தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.