திருநெல்வேலி தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தன்னை எதிர்க்கும் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பையும் ஒரே மேடையில் வாரிச் சுருட்டினார். “நம்ம மேல அவங்களுக்கு ஏன் அவ்வளவு காண்டு தெரியுமா? அவங்க வீட்டுக்குள்ளேயே நம்ம விசில் சத்தம் ரொம்ப பலமா கேக்குதாம்!” என்று அவர் பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே கட்டுக்கடங்காத ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்பு குடும்பங்களுக்குள்ளும் தவெக-வின் செல்வாக்கு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை இந்த ஒரு ‘பஞ்ச்’ வசனத்தின் மூலம் விஜய் தெறிக்கவிட்டுள்ளார். அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த பேச்சு, சமூக வலைதளங்களிலும் இப்போது செம ட்ரெண்டிங்!
