நெல்லை தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கூட்டணிகளையும் மிகக் கடுமையாகச் சாடினார். “திமுக-வின் நேரடி மற்றும் மறைமுக கூட்டணிகள் அனைத்தும் தவெக-வின் வளர்ச்சியைக் கண்டு பயப்படுகின்றன. யாரைப் பற்றியும் கவலைப்படாமல், கூட்டணிக் கணக்குகளைப் பார்க்காமல் மக்களுக்காக இந்த விஜய் வந்துள்ளேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.

​மேலும், “திமுக கூட்டணியின் நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. அதைவிட பாஜக கூட்டணியின் நிலைமை அதோகதிதான். என்னை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இத்தனை பேர் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால், அதற்கு என் மீதான அவர்களின் ‘காண்டு’ தான் காரணம்” என்று தனது பாணியில் அதிரடி ‘பஞ்ச்’ கொடுத்தார். விஜய்யின் இந்த நேரடியான தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.