மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நிலவி வந்த மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கியமான தொழில் நகரமான ஜூபைல் (Jubail) பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை ஈரான் – சவுதி மோதலில் நடுநிலை வகித்து வந்த பாகிஸ்தான், இப்போது வெளிப்படையாக சவுதி அரேபியா பக்கம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, சவுதியின் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவித்தால் தங்களின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி (Defense Pact) சவுதிக்கு ஆதரவாகக் களம் இறங்குவோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு ஈரானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
