தாயின் பாசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக ஒரு நெகிழ்ச்சியான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம் என்ற பல் மருத்துவர் தனது தாயார் கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த ஒரு பழைய தட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்தத் தட்டில் வேறு யாரையும் அவர் சாப்பிட அனுமதித்ததில்லை என்றும், தனது பிள்ளைகளை மட்டுமே அதில் சாப்பிட அனுமதிப்பார் என்றும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தட்டில் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது என்பது அவரது தாயாரின் மறைவுக்குப் பிறகுதான் விக்ரமுக்குத் தெரியவந்தது.
விக்ரம் பள்ளி மாணவனாக இருந்தபோது ஒரு போட்டியில் வென்று பரிசாகப் பெற்ற தட்டுதான் அது. தனது மகன் வாங்கிய முதல் வெற்றிப் பரிசு என்பதால், அதன் மீது கொண்ட தீராத பாசத்தால் அந்தத் தாயார் 20 ஆண்டுகளாக அதையே பயன்படுத்தி வந்துள்ளார்.
மகனின் சிறு சாதனையைக்கூட மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதும் ஒரு தாயின் பேரன்பை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இதைப் படித்த இணையவாசிகள் பலரும் தங்கள் தாயுடனான நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து வருவதுடன், “அம்மாவுக்கு நிகர் அம்மாதான்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
