ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனா மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பகடாலா கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது வீட்டு மரத்தில் இருந்த கொய்யாப்பழத்தைப் பறித்ததாகச் சந்தேகப்பட்டு, 6 வயது சிறுமி ஒருவரை இரும்புச் சங்கிலி மற்றும் கயிறுகளால் படிக்கட்டு கம்பியில் கட்டி வைத்துச் சித்திரவதை செய்துள்ளார்.
அந்த வழியாகச் சென்ற இந்தியக் கடற்படை கேப்டன் ரோஹித் ஜஸ்வால், சிறுமியின் “அங்கிள் காப்பாற்றுங்கள்” என்ற அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்தச் சிறுமியை மீட்டதுடன், ராணுவ வீரரின் கொடூரத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
⚠️TW: SENSITIVE VISUALS
In Una, Himachal Pradesh, a man tied up a young girl with ropes as punishment for picking guavas from his property, He later apologized after the video went viral.
pic.twitter.com/dWxsZORDjm— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 5, 2026
சிறுமியிடம் கேட்டபோது தான் பழம் பறிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சைல்டு ஹெல்ப்லைன் புகாரின் பேரில் அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
