ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் வெறும் 26 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, ஐபிஎல் வரலாற்றிலேயே மிக வேகமான முறையில் 500 ரன்களைக் கடந்த ஜோடி  என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

இதற்கு முன்பு 2008-ஆம் ஆண்டு வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஜோடி படைத்திருந்த சாதனையை, வெறும் 248 பந்துகளில் 500 ரன்களை எட்டியதன் மூலம் இந்த இளம் ஜோடி முறியடித்துள்ளது.

இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் சதம் விளாசி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அண்டர்-19 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார்.

ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது. இவர்களின் அபாரமான பேட்டிங் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷியை விரைவில் இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் விளையாட்டு விமர்சகர்களிடையே வலுத்து வருகிறது.