கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தும், தனது தந்தையின் நிழலில் சொகுசு வாழ்க்கை வாழ்வதைத் தவிர்த்து கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒருபுறம் அவரது சகோதரி சாரா டெண்டுல்கர் தந்தையின் முதலீட்டில் பெரிய பிராண்டுகளை வெற்றிகரமாக நடத்தி வரும் நிலையில், அர்ஜுனோ எவ்விதத் தலைக்கனமும் இன்றி கிரிக்கெட் மைதானத்தில் வியர்வை சிந்தி உழைத்து வருகிறார்.

குறிப்பாக, ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் சக வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில்களைச் சுமந்து செல்வது (Water boy), எல்லைக் கோட்டில் நின்று பந்துகளை எடுத்து வருவது என ஒரு சாதாரண வீரராக அவர் காட்டும் எளிமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“>

வாரிசு என்ற அடையாளத்தைப் பயன்படுத்திச் சுலபமாக முன்னேற வாய்ப்புகள் இருந்தும், ‘தனக்கான அடையாளத்தைத் தனது சொந்த உழைப்பால் மட்டுமே உருவாக்க வேண்டும்’ என்பதில் அர்ஜுன் உறுதியாக இருக்கிறார்.

சொகுசான வாழ்க்கை, விலை உயர்ந்த கார்கள் எனத் தந்தை தேடி வைத்த வசதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, வெயிலிலும் மழையிலும் மைதானத்தில் போராடும் அவரது இந்த மனப்பக்குவம், சலுகைகளை விட லட்சியமே முக்கியம் என்பதை உரக்கச் சொல்கிறது.