தில்லி துவாரகா விரைவுச்சாலையில், வாடகைக் கார் ஒன்று தவறான திசையில் வந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துவாரகா விரைவுச்சாலையில் உள்ள யஷோபூமி ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், சரியான பாதையில் வந்த வாகனத்தின் மீது மோதுவது போல் அந்த கார் வந்துள்ளது. மயிரிழையில் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், காரிலிருந்து இறங்கிய அந்த ஓட்டுநர் மற்றவரை மிக மோசமாகப் பேசியது டாஷ்கேம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

“>

 

இந்த வீடியோவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள தில்லி காவல்துறை, குற்றவாளியையும் அவரது வாகனத்தையும் அடையாளம் கண்டுள்ளது. புதிய சட்டமான அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் கீழ் அவர் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.