பெங்களூருவில் 37 வயது மதிக்கத்தக்க கணவர் ஒருவர், தனது மனைவி மீது அளித்துள்ள பாலியல் மற்றும் சித்திரவதை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 முதல் 2024 வரை தனது மனைவி தன்னை மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இயற்கை முறைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தன்னைத் தூண்டியதாகவும், தனது தோழியுடன் கட்டாயப்படுத்தித் தன்னை உடலுறவில் ஈடுபடுத்த முயன்றதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆபாச வீடியோக்களை அனுப்பி அவற்றைப் போலவே தன்னையும் செய்யச் சொல்லி மனைவி வற்புறுத்தியதாகவும், தனது முன்னாள் காதலர்களுடன் மனைவிக்குத் தொடர்பு இருந்ததாகவும் அவர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் தன்னை வீட்டை விட்டுத் துரத்தியதோடு, சுமார் 1.87 லட்சம் ரொக்கம், 44 கிராம் தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகை மற்றும் தனது கல்விச் சான்றிதழ்களை மனைவி சட்டவிரோதமாகப் பறித்து வைத்திருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
