ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு சினிமா பாணி கொள்ளை சம்பவம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம்ஜீத் சிங் என்பவருக்கும் ரேகா கவுர் என்பவருக்கும் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது.
திருமணமான சில நாட்களிலேயே ரேகாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரியத் தொடங்கியுள்ளது. ஜூன் 23-ம் தேதி அன்று, தனது மாமியாருக்குக் கொடுத்த கிச்சடியில் நைசாக பினாயிலை கலந்து கொடுத்துள்ளார் ரேகா. அதைச் சாப்பிட்ட மாமியார் மயங்கி விழுந்து உயிருக்குப் போராட, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கேப்பைப் பயன்படுத்திக் கொண்ட ரேகா, வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மற்றும் 30,000 ரூபாய் ரொக்கத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.
போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தனது அத்தையுடன் சேர்ந்து கொண்டு பல இளைஞர்களைத் திட்டமிட்டுத் திருமணம் செய்து, இதுபோல கைவரிசை காட்டி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இப்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ‘லேடி கில்லர்’ ரேகாவின் இந்த அதிரடி வேட்டை அந்தப் பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.
