இந்திய ரயில்வேயில் பணிபுரியும் டிடிஇ ஒருவரின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. தெற்கு ரயில்வேயின் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், டிடிஇ ஒருவரின் ஸ்டைலான தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
காதுகளில் தங்கக் கடுக்கன், கையில் ஒரு மாஸான கடிகாரம் என அவர் வலம் வந்ததைக் கண்ட பயணி ஒருவர், ஆர்வம் தாங்காமல் தனது மொபைல் கேமராவால் அந்த கடிகாரத்தை ஜூம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.
View this post on Instagram
அந்த கடிகாரம் பார்ப்பதற்கு உலகப்புகழ் பெற்ற ‘ரிச்சர்ட் மில்லே ஆர்எம் யூபி-01 பெராரி’ (Richard Mille RM UP-01 Ferrari) மாடல் போலவே இருந்துள்ளது. இந்தக் கடிகாரத்தின் ஒரிஜினல் விலை சுமார் 15 முதல் 21 கோடி ரூபாய் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஒரு டிடிஇ கையில் இவ்வளவு கோடி மதிப்புள்ள வாட்சா?” என வியந்து கமெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், வீடியோ எடுத்த பயணி பின்னர் விளக்கம் அளிக்கையில், இது அவரது நண்பர் பரிசளித்தது என்றும், இது ஒரிஜினலா அல்லது அதன் முதல் பிரதியா (First Copy) என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். எது எப்படியோ, ஒரு ரயில்வே ஊழியரின் ‘ரிச்’ லுக் இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
