நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் தன் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர் என்றும், தனது மனைவியும் விஜய்யும் ஒரு ‘அக்கா-தம்பி’ உறவுமுறையில்தான் பழகி வருகிறார்கள் என்றும் சுந்தர் சி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விஜய்யையோ அல்லது அவரது புதிய கட்சியையோ எந்த வகையிலும் விமர்சிக்க தான் தயாராக இல்லை என்று அவர் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்துவிட்டார்.
இருப்பினும், தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் நிலவரமே வேறு என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுரை மத்திய தொகுதியைப் பொறுத்தவரைப் போட்டி என்பது எப்போதும் போல உதயசூரியனுக்கும் (திமுக), இரட்டை இலைக்கும் (அதிமுக) இடையேதான் இருக்கும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கம் இருந்தாலும், தேர்தல் களத்தில் அதிமுக – திமுக மோதல்தான் பிரதானமாக இருக்கும் என்ற சுந்தர் சி-யின் இந்த வெளிப்படையான பேச்சு அரசியல் கவனிப்பாளர்களிடையே ஒரு புதுவிதமான பரபரப்பை உருவாக்கியுள்ளது.
