தமிழக அரசியலில் ‘தம்பி’ என்று விஜயை அழைத்து வந்த சீமான், தற்போது அவரை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜய்க்கு தன் மீதே நம்பிக்கை இல்லை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
“மக்களிடம் ஓட்டு கேட்கும்போது கொள்கை தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் பேச்சில் தெளிவு இல்லை. கூட்டத்தைக் கூட்டுவது எளிது, ஆனால் மாற்றத்தை உருவாக்குவது கடினம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தன்னையும் நம்பாமல் மக்களையும் நம்பாதவன்தான் இரு தொகுதிகளில் போட்டியிடுவான்”- நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்#Seeman | #NTK | #ElectionWithPT pic.twitter.com/XUHGnHAJ8i
— PttvOnlinenews (@PttvNewsX) April 1, 2026
மேலும், விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அவர் கையாளும் யுக்திகள் குறித்துப் பேசிய சீமான், “உனக்கே உன் கொள்கை மேல நம்பிக்கை இல்லைன்னா, மக்கள் எப்படி உன்னை நம்புவாங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே 2026 தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், சீமானின் இந்த விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமைதி காத்து வந்த சீமான், இப்போது விஜய்க்கு எதிராகத் தனது அரசியல் அஸ்திரங்களை வீசத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
