தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அருண்ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில் அருண்ராஜ் குறிப்பிட்டிருப்பதாவது,”இன்று ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம். கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுாக அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல், அவற்றை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். தனக்கு வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கிவிட்டு, தான் மட்டுமே புத்திசாலி என்பது போல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

ஏப்ரல் 23-ஆம் தேதியை தமிழ்நாடு ‘புத்திசாலிகள் தினமாக’ கொண்டாடும். அன்று மக்கள் தங்களின் வாக்குப்பதிவின் மூலம், தாங்கள் ஏமாறும் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபிப்பார்கள்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களே! இன்னும் 22 நாட்கள் மட்டுமே நீங்கள் கனவு காண முடியும். அதன் பிறகு மக்கள் உங்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்,” என்று அந்தப் பதிவில் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.