காதலர்களுக்கு இடையே அன்பின் அடையாளமாகப் பரிமாறிக் கொள்ளப்படும் காதல் முத்தம் (Hickey) ஒரு உயிரையே பறித்துள்ள சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. மெக்சிகோவைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவன், தனது 24 வயது காதலியுடன் நேரத்தைச் செலவிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அன்று இரவு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த இளைஞனுக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பதறிப்போன பெற்றோர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அந்த இளைஞன் உயிரிழந்தார்.
மருத்துவர்கள் நடத்திய சோதனையில், காதலி கொடுத்த அந்த ‘லவ் பைட்’ எனப்படும் முத்தம் கொடுத்த அழுத்தத்தினால், இளைஞனின் கழுத்துப் பகுதியில் ரத்தக் கட்டு (Blood Clot) ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அந்த ரத்தக் கட்டு மெதுவாக மூளைக்குச் சென்று அவருக்கு ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதத்தை ஏற்படுத்தியதே இந்த உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ வரலாற்றிலேயே இது போன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்றாலும், காதலின் பெயரால் நடந்த இந்த விபரீதம் இளைஞர்களிடையே பெரும் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
