ஈரான் போர் பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கோருவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான முறையில் தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் கிடைக்காவிட்டால் அமெரிக்கா பொறுப்பல்ல என்று கூறியுள்ள அவர், “எரிபொருள் வேண்டுமென்றால் அமெரிக்காவிடம் காசு கொடுத்து வாங்குங்கள், இல்லையெனில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நீரிணைக்குச் சென்று சண்டையிட்டு எடுத்துக்கொள்ளுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

​மேலும், இனி அமெரிக்கா இது போன்ற விவகாரங்களில் உலக நாடுகளுக்கு உதவாது என்றும் அவர் கைவிரித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவப் பாதுகாப்பை நம்பி இருந்த நாடுகளுக்கு, ட்ரம்ப்பின் இந்த அதிரடிப் பேச்சு உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த ‘பச்சையான’ எச்சரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.