இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இருந்து பிரிந்தது மற்றும் தனது தற்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்குத் திரும்பியது குறித்து ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான பிரிவு தொடக்கத்தில் எனக்கு சற்று கடினமாகவே இருந்தது. அந்த அணியுடன் சுமார் 12 முதல் 13 ஆண்டுகள் நீண்ட காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இத்தனை ஆண்டுகால பந்தத்தை விட்டு விலகும்போது இயற்கை முறையில் நான் சற்றே உணர்ச்சிவசப்பட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அவர் கூறுகையில், “இருப்பினும் மாற்றங்கள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து என்னைத் தேற்றிக் கொண்டேன். இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், ஐபிஎல் தொடரில் நான் முதன்முதலில் அறிமுகமாகி கோப்பையை வென்ற அதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கே மீண்டும் திரும்பியதுதான். இது ஒரு நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய தினம் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் முதலில் துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை செய்து மைதானத்தில் கொண்டாடினார். இருப்பினும் சிஎஸ்கே வின் தோல்வியை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கலந்து செய்துள்ளது.
