ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கும் பாத்திரம் கழுவும் திரவங்கள் (Dishwashing Liquid), சமையலறையில் உள்ள மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களில் ஒன்றாக இருக்கலாம் என மருத்துவர் வோரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரபல நிறுவனங்களின் திரவங்களில் ‘ஐசோதியசோலினோன்கள்’ (Isothiazolinones) எனப்படும் செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் ஒரு வகையான ‘பயோசைடு’ (Biocide) ஆகும்.

இந்த வேதிப்பொருள் குறித்து டாக்டர் வோரா கூறுகையில், “அறிவியல் ஆய்வுகளின்படி, இவை கடுமையான தோல் ஒவ்வாமையை (Skin Sensitisers) ஏற்படுத்தக்கூடியவை. சிலருக்கு இது ‘டெர்மடைடிஸ்’ எனப்படும் தோல் அழற்சியை உண்டாக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

பாத்திரம் கழுவும் திரவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள், இவை உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும் ‘எண்டோகிரைன் டிஸ்ரப்டர்’ (Endocrine Disruption) ஆகச் செயல்படக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளன.

மேலும், கவனக்குறைவாக இந்தத் திரவத்தை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு, உடலின் உட்புற மென்படலங்களில் (Internal Mucosal Injuries) கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஃ

இந்த விவகாரத்தில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாத்திரங்களை நாம் தண்ணீரில் கழுவினாலும், இந்த வேதிப்பொருட்களின் மெல்லிய படிவங்கள் (Residue) தட்டுகள் மற்றும் கரண்டிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். நாம் உணவு உண்ணும் போது, அந்த எச்சங்கள் நம் உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dr. Manan Vora (@dr.mananvora)

கடுமையான வேதிப்பொருட்களுக்குப் பதிலாக, இயற்கையான மற்றும் பாதுகாப்பான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என மருத்துவர் பரிந்துரைக்கிறார். அதன்படி தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் ‘சர்ஃபாக்டண்ட்ஸ்’ (Plant-based surfactants) கொண்ட திரவங்களைப் பயன்படுத்தலாம்.

கொழுப்பைக் கரைக்க இயற்கையான என்சைம்களைப் பயன்படுத்தும் தயாரிப்புகளைத் தேர்வு செய்யலாம். தேவையற்ற நறுமணம் மற்றும் வண்ணங்கள் இல்லாத எளிய தயாரிப்புகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானவை.

“வீட்டில் தேவையற்ற வேதிப்பொருட்களின் தாக்கத்தைக் குறைக்க விரும்பினால், இதுபோன்ற சிறிய மாற்றங்கள் பெரிய நன்மைகளைத் தரும்,” என டாக்டர் வோரா வலியுறுத்தியுள்ளார்.