கல்பரகி மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம், மனிதநேயம் எந்தளவுக்கு மரித்துப் போயிருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சியமாக அமைந்திருக்கிறது. ஷைலா (28) என்ற அந்தப் பெண், தனது கணவர் அக்‌ஷய் ஜாதவ் உடன் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் காரை திடீரென நிறுத்திய அக்‌ஷய் ஜாதவ், மனைவியை வண்டியை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளியுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷைலாவை வெறித்தனமாகத் தாக்கிய அவர், அதன்பின் தனது காரை எடுத்து அந்தப் பெண்ணின் உடல் மீது ஏற்றிச் சென்றார். ​இந்தக் கொடூரமான காட்சிகள் அங்கு கூடி இருந்த மக்களையும், அவ்வழியாகச் சென்றவர்களையும் நிலைகுலைய வைத்தன.

வீடியோவை காண

பலர் இந்தக் கொலையைத் தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தார்களே தவிர, அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய சோகம். தற்போது அந்த நபர் போலீஸ் பிடியில் இருக்கிறார், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்ற மகளைப் போல இருந்த அந்தப் பெண், காதலிக்கப்பட்ட கணவனால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.