உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மின்கம்பத்தை மாற்றி அமைக்கத் தேவையான நிலம் உடனடியாக கிடைக்காததே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.
<a href=”http://

“>

தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கிடைத்தவுடன் விரைவில் மின்கம்பம் அகற்றப்படும் என்றும் லக்னோ பிராந்திய அலுவலகம் உறுதி அளித்துள்ளது.