அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமாதானம் பேசத் துடித்த பாகிஸ்தானுக்கு, ஈரான் நாடு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 6850 டன் சரக்குகளுடன் பாகிஸ்தானின் கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ‘செலன்’ (Selen) என்ற கன்டெய்னர் கப்பலை, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் ராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது. முறையான அனுமதி இல்லை என்ற காரணத்தைக் கூறி இந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டாலும், இதன் பின்னணியில் பெரிய அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தூதுவராகச் செயல்பட நினைக்கும் பாகிஸ்தானின் பெரிய தலைவர்கள், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஈரானியத் தலைவர்களுடன் 3 முறை போனில் பேசியுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூட ஈரானிய அதிபருடன் பேசியும் பலன் கிடைக்கவில்லை. மற்ற நாடுகளின் கப்பல்களை அனுமதிக்கும் ஈரான், பாகிஸ்தான் கப்பலை மட்டும் தடுத்து நிறுத்தியது அந்த நாட்டுக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அரசு தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் மௌனம் காத்து வருகிறது.
