இந்தியாவில் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரி சேவையில் முன்னணியில் உள்ளன. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவை இந்த செயலிகள் மூலம் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்கின்றனர். ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே டெலிவரி பணியாளர்கள் உணவை வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
தற்போது இந்த நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ‘பிளாட்பார்ம் கட்டணத்தை’ அதிரடியாக உயர்த்தியுள்ளன. சமீபத்தில் சொமாட்டோ நிறுவனம் தனது பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ. 12.50-லிருந்து ரூ. 14.90 ஆக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, ஸ்விக்கி நிறுவனமும் தனது கட்டணத்தை ரூ. 14.99-லிருந்து ரூ. 17.58 ஆக உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களில் உணவுகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது டெலிவரி நிறுவனங்களின் இந்தக் கூடுதல் கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
