மகாராஷ்டிராவில் ஊசி போடுவதற்கு பயந்து ரேபிஸ் தடுப்பூசியைத் தவிர்த்த 9 வயது சிறுமி, நாய் கடித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் நாய் கடித்த விஷயத்தை பெற்றோரிடம் மறைத்த அந்தச் சிறுமி, சில நாட்களுக்கு முன்புதான் தனக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி கூறியுள்ளார்.
ஆனால், தடுப்பூசி போடும் நேரத்தைத் தவறவிட்டதால், ரேபிஸ் வைரஸ் அவரது உடலில் தீவிரமாகப் பரவி, இறுதியில் சிகிச்சை பலனின்றி அவரது உயிரைப் பறித்தது. உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, அந்தச் சிறுமி உணவை உட்கொள்வதை நிறுத்தியதுடன், ஒளியைப் பார்த்தால் பயப்படும் ‘போட்டோபோபியா’ அறிகுறியால் கண்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்லப் பிராணிகளோ அல்லது தெரு நாய்களோ கடித்தால், சிறு காயமாக இருந்தாலும் பயப்படாமல் உடனடியாகத் தடுப்பூசி செலுத்திக்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் துயரமான நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
