மேற்காசியாவில் ஈரான் – அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
முன்னதாகப் பிரதமர் மோடி, “மேற்காசியச் சூழல் சவாலாக உள்ளது; கொரோனா காலத்தைப் போல இதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், “தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? அல்லது நாட்டு மக்களா? எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா? மக்களைக் காக்க நீங்கள் தயாரா?” என அடுக்கடுக்கான வினாக்களை எழுப்பியுள்ளார்.
Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்… pic.twitter.com/b90TgEc7he
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 24, 2026
“>
போர் காரணமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, மக்களை அச்சுறுத்தாமல் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே முதல்வரின் இந்தச் சாடலின் பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.
