மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஆலோனை நடத்திய பிறகு எக்ஸ் (X) தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்களை நாங்கள் நசுக்கி வருகிறோம்; ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களும் தொடரும்” என முழங்கியுள்ளார்.

“>

 

குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானின் மேலும் இரண்டு முக்கிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க டிரம்ப் விதித்த கெடு முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க – இஸ்ரேல் படைகளின் ராணுவ பலத்தை ஈரானுக்கு எதிரான ஒரு நிரந்தர ஒப்பந்தமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.