சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில நிஜ வாழ்க்கை சம்பவங்கள் அப்படியே சினிமா கிளைமேக்ஸ் போல வைரலாவது உண்டு. அப்படி ஒரு வீடியோதான் தற்போது இணையத்தை அதிரவைத்து வருகிறது.
ஒரு அழகான நதிக்கரையில் காதலர்கள் இருவரும் ஜாலியாகப் பேசிக்கொண்டு, அந்த அமைதியான சூழலை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களின் இந்த ‘ரொமான்ஸ்’ நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திடீரென அந்தப் பெண்ணின் தந்தை கையில் ஒரு பெரிய லத்தியுடன் (கம்பு) அங்கே என்ட்ரி கொடுத்தார்.
View this post on Instagram
தன் மகள் காதலனுடன் இருப்பதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த அந்தத் தந்தை, யோசிக்காமல் அந்த இளைஞரை லத்தியால் விளாசத் தொடங்கினார். அடி தாங்க முடியாமல் அந்த இளைஞர் ஓட்டம் பிடிக்க, விடாமல் துரத்திய தந்தை, அடுத்து தன் மகளையும் கம்புடன் துரத்த ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த ‘லைவ் ஆக்ஷன்’ வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “பப்ளிக் பிளேஸை லாட்ஜ் நினைச்சீங்களா?” என ஒரு தரப்பும், “அப்பான்னா கெத்துதான்” என மறுதரப்பும் கமெண்ட்களைத் தட்டி வருகின்றனர்.
