அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் (Hormuz) கடல் பகுதியை 48 மணி நேரத்திற்குள் முழுமையாகத் திறந்து விட வேண்டும் என்று ட்ரம்ப் விடுத்த கெடுவை ஈரான் அலட்சியப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், உடனடியாக 5000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை ஈரான் நோக்கிப் புறப்பட உத்தரவிட்டுள்ளார். அதிநவீன எஃப்-35 (F-35) போர் விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான ‘கார்க்’ (Kharg) தீவைக் கைப்பற்றி, அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா ரகசியத் திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை அமெரிக்கா தரையிறங்கித் தாக்கினால், கடல் முழுவதும் கண்ணிவெடிகளை வைத்து வெடிக்கச் செய்வோம் என ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது. இரு நாடுகளும் மல்லுக்கட்டி நிற்பதால், உலகப் போர் மூளுமோ என்ற அச்சத்தில் சர்வதேச நாடுகள் உறைந்து போயுள்ளன.