19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ‘MI Mix’ என்ற பெயரில் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர்களிடையே பேசிய ரோகித் சர்மா, “உங்களுக்காக 6-வது ஐ.பி.எல். கோப்பையை வெல்ல நிச்சயமாக முயற்சிப்போம்” என்று உறுதி அளித்தார். ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அணியின் கேப்டன் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், ரோகித் சர்மாவின் இந்த அதிரடி பேச்சு மும்பை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
