வாழ்க்கை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறலாம் என்பதற்குச் சாட்சியாக, ஒரு காலத்தில் கோடீஸ்வரராக இருந்த இளைஞர் ஒருவர் தற்போது தெருவில் பிச்சை எடுக்கும் உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த வி.கே. கிரி என்ற அந்த இளைஞர், தான் ஒரு காலத்தில் ஹரியான்வி திரைப்படமான ‘மந்தன்’ படத்தின் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.

தனக்குச் சொந்தமாக இரண்டு தொழிற்சாலைகளும், பல விலையுயர்ந்த கார்களும் இருந்ததாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுடன் வசதியாக வாழ்ந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவிக்கிறார்.

காலச்சக்கரம் சுழன்றதில் இன்று ஒருவேளை உணவிற்காகத் தெருக்களில் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறும் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. ஒரு திரைப்படக் கலைஞராகவும் தொழிலதிபராகவும் வலம் வந்தவர், இவ்வளவு மோசமான நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டார் என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“>

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பலரும் அவருக்கு உதவ முன்வருவதோடு, வாழ்வின் நிலையாமையை எண்ணி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.