மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு அல்லது அந்தந்த துறை சார்ந்த டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். 18 முதல் 27 வயதுடையவர்கள் இதற்கு தகுதியானவர்கள் என்றாலும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 2026 ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டுமே, ஆனால் பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் https://ssb.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.