புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (மார்ச் 23) நிறைவடையும் நிலையில், அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், வி.கே.சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIAPDMK) சார்பில் முதற்கட்டமாக 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் சிலம்பரசனும், வில்லியனூர் தொகுதியில் நந்தகோபாலும் களம் காண்கின்றனர். அதேபோல் உழவர்கரை தொகுதியில் லாவண்யாவும், இந்திரா நகர் தொகுதியில் ஜெயபால் (எ) செங்கேணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​மற்றொரு முக்கியத் திருப்பமாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான அணி புதுச்சேரியில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதான கூட்டணிகளுக்கு இடையே சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோரின் இந்த அதிரடி நகர்வுகள் புதிய சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ‘தவெக’, ‘அவிக’ மற்றும் சசிகலா அணி எனப் பலமுனைப் போட்டிகளால் தேர்தல் களம் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.