நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட தனது லாரியை விட்டு நகர மறுத்த ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
விபத்தில் லாரி தலைகீழாகக் கவிழ்ந்ததில் ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த போதிலும், அவர் மருத்துவமனைக்குச் செல்லாமல் லாரியின் அருகிலேயே அமர்ந்திருந்தார்.
நான் வர வரைக்கும் வண்டிய விட்டு எங்கும் போக கூடாது.. நடுரோட்டில் கவிழ்ந்த லாரி.. லாரி அருகே ரத்தம் சொட்ட அமர்ந்திருந்த ஓட்டுநர்..! | Lorry Driver ViralVideo | #Dindigul #LorryVideo #LorryDriver #NewsTamil24x7 pic.twitter.com/ihCgBkwroE
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) March 21, 2026
“யார் வந்தாலும் சரி, முதலாளி வர்ற வரைக்கும் நான் வண்டியை விட்டு எங்கும் நகர மாட்டேன்” என அவர் பிடிவாதமாக இருந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது உயிரை விட, தான் ஓட்டி வந்த வாகனத்தின் மீதும், முதலாளியின் நம்பிக்கையின் மீதும் அவர் காட்டிய அந்த விசுவாசம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காயத்தையும் பொருட்படுத்தாமல் கடமையே கண்ணாக இருந்த அந்த ஓட்டுநரின் செயலைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது மரியாதையைத் தெரிவித்து வருகின்றனர்.
