சமூக வலைதளங்களில் எப்போது என்ன வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணின் வீடியோ இணையவாசிகளை உறைய வைத்துள்ளது. பொதுவாகப் பல் சொத்தையாகி வலி ஏற்பட்டால் நாம் பல் மருத்துவரிடம் சென்று, மயக்க ஊசி போட்டுக்கொண்டு வலியில்லாமல் பல்லைப் பிடுங்குவோம்.

ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு பெண், எந்தவித மருத்துவ உதவியும் இன்றி ஒரு சாதாரண நபரின் உதவியுடன் ‘கட்டிங் பிளேயர்’ (Pliers) மூலம் தனது சொத்தைப் பல்லைப் பிடுங்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Dr. Shukla’s Aesthetic Clinic | Dentist & Skin Specialist (@drshuklaklinic)

பார்ப்பதற்கே உடல் சிலிர்க்க வைக்கும் இந்த காட்சியில், அந்தப் பெண் பயமின்றி அமர்ந்திருப்பதும், இறுதியில் அந்த நபர் பிளேயரை வைத்து பலமாக இழுத்துப் பல்லைப் பிடுங்குவதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “பல் அவருக்குப் பிடுங்கப்படுகிறது, ஆனால் வலி எனக்கு எடுக்கிறது” என்றும், “இப்படியெல்லாம் ஆபத்தான முயற்சிகளைச் செய்யாதீர்கள்” என்றும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவச் செலவை மிச்சப்படுத்த இப்படியான விபரீத சோதனைகளில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.