எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் நிலவும் அரசியல் சூழல் குறித்து நடத்திய கள ஆய்வில், ஆளுங்கட்சியான திமுக இப்போதும் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாகத் திமுகவின் கோட்டையாக விளங்கும் இப்பகுதியில், அக்கட்சியின் ‘திராவிட மாடல்’ ஆட்சி மற்றும் நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், எழும்பூரில் மீண்டும் திமுக தனது வெற்றியை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில் உடன்பிறப்புகள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். இந்த முறை தேர்தல் களம் வழக்கமானதாக இல்லாமல், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும் புதுப்பேட்டை பகுதி மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், திமுகவிற்கு அடுத்தபடியாக தவெக இரண்டாம் இடத்தைப் பிடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அக்கட்சிக்கு இருக்கும் ஆதரவு, பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் போட்டியாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அவர் வரும் தேர்தலில் எழும்பூரில் திமுக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது தவெக போன்ற புதிய சக்திகள் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.