சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காண்போரைக் கதிகலங்கச் செய்கிறது. ஒரு மரத்தின் அடியில் அடர்த்தியாகப் படர்ந்திருக்கும் வேர்களைப் போல ஏதோ ஒன்று காட்சியளிக்கிறது. முதலில் அதை மரத்தின் ஒரு பகுதி என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.
ஆனால், அங்கே நின்றிருந்த நபர் சந்தேகத்தின் பேரில் ஒரு கல்லை அதன் மீது எறிந்தபோதுதான் அந்த அதிர்ச்சியான உண்மை வெளிப்பட்டது. அது மரத்தின் வேர் அல்ல, மாறாக மரத்தோடு மரமாகத் தன்னை மறைத்துக்கொண்டு சுருண்டு கிடந்த ஒரு ராட்சதப் பாம்பு என்பது தெரியவந்தது.
View this post on Instagram
“>
மேலும் கல் பட்டவுடன் அந்தப் பாம்பு சீறிக்கொண்டு நகரத் தொடங்கியதும், அதைப் பார்த்த அந்த நபர் பயத்தில் உறைந்து போனார். இயற்கையோடு ஒன்றிப்போய் ‘கேமப்ளாஜ்’ முறையில் மறைந்திருக்கும் பாம்புகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி.
இந்நிலையில் காடுகள் அல்லது மரங்கள் நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது, நாம் எதன் மீது கால் வைக்கிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. இக்கட்டான சூழலில் பாம்புகளைத் துன்புறுத்தாமல் பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது.
