சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு வினோதமான காணொலிகள் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் தற்போது ஓடும் இரயிலில் ஒருவர் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட வரட்டிகளை விற்பனை செய்யும் காட்சி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raushan Kumar (@9887raushankumar)

பொதுவாக இரயில்களில் தேநீர் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு பழகிய பயணிகளுக்கு இந்த நபர் ஒரு கூடையில் வரட்டிகளை வைத்துக்கொண்டு அதனை வாங்குமாறு மிகவும் தன்னம்பிக்கையுடன் கூவிக்கூவி விற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் அந்த வரட்டிகளின் சிறப்புகளைப் பற்றிப் பேசிய தனித்துவமான விதம் அங்கிருந்த பயணிகளைச் சிரிக்க வைத்ததுடன் பலரை அதனைத் தங்களது கைபேசிகளில் படம்பிடிக்கவும் தூண்டியது. தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு வரும் இந்தச் சுவாரசியமான காணொலி பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.