உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகளின் அசாத்தியமான ஒரு அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விந்தியச்சல் பகுதியில் உள்ள கந்தித் இனாரா அருகே புதிய தார் சாலை அமைக்கப்பட்ட போது, சாலையின் நடுவே இருந்த ஒரு கை பம்பை (Handpump) அகற்றாமலேயே, அதன் நான்கு பக்கங்களிலும் தார் சாலையை அமைத்து அதிகாரிகள் வேலையை முடித்துள்ளனர்.
முறையாக அந்த கை பம்பை வேறு இடத்திற்கு மாற்றியிருக்க வேண்டிய இன்ஜினியர்களும், ஒப்பந்ததாரரும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதற்காகச் செய்த இந்த வினோதமான காரியம் இப்போது பொதுமக்களுக்கு உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
जब प्लानिंग और एग्जीक्यूशन की दोस्ती ना हो…
उत्तर प्रदेश के जिला मिर्जापुर में PWD ने हैंडपंप को बीच रास्ते पर छोड़कर सड़क बना दी !! pic.twitter.com/8qBoOk1rtQ
— Sachin Gupta (@Sachingupta) March 18, 2026
குறிப்பாக சித்திரை நவராத்திரி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்பதால், இரவு நேரங்களில் இந்த கை பம்ப் வாகன ஓட்டிகளுக்குத் தெரியாமல் பெரிய விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வருகையை முன்னிட்டு அவசரம் அவசரமாக இந்தச் சாலை போடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகாரிகளின் “புத்திசாலித்தனத்தை” மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
