மகாராஷ்டிராவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, மனைவி தனது கணவனை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கணவனின் அந்தரங்க உறுப்பில் பலமாகத் தாக்கிய அந்தப் பெண், பின்னர் ஆத்திரத்தில் அவரது உடலின் பாகங்களைப் பற்களால் கடித்துக் குதறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் கணவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தனது கொடூரச் செயலை மறைக்க முற்பட்ட அந்தப் பெண், கணவன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி அக்கம்பக்கத்தினரையும் போலீசாரையும் நம்ப வைக்க முயற்சி செய்துள்ளார்.
இருப்பினும், உயிரிழந்தவரின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் பற்களால் கடிக்கப்பட்ட அடையாளங்களைக் கண்டு போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடற்கூறாய்வு அறிக்கையில் அது கொலை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, போலீசார் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கள்ளக்காதலால் அரங்கேறிய பயங்கரம்விசாரணையின் முடிவில், தனது கள்ளக்காதலனுடன் தடையின்றி வாழ்வதற்காகவே இந்தத் திட்டத்தைத் தீட்டியதாக அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவியாக இருந்த கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
