இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ஜிபி (Jibhi) பகுதியில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் ஒரு கார் விபத்து நிகழ்ந்துள்ளது. தில்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சென்ற கார், மலைப்பாதையில் நிலைதடுமாறி மலையிலிருந்து உருண்டு கீழே உள்ள மற்றொரு சாலையில் வந்து விழுந்தது.
கார் தலைகீழாக விழுந்து அதன் சக்கரங்கள் அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்த காட்சி பதைபதைக்க வைத்தது. விபத்து நடந்த அடுத்த சில நொடிகளில், அங்கிருந்த உள்ளூர் மக்களும் மற்ற வாகனங்களில் வந்தவர்களும் மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
Video from Jibhi shows a Delhi based tourist car skidding off the road and landing on the road below. Thankfully, people in passing vehicles and locals rushed to help and everyone was saved. A real narrow escape and a reminder of how unpredictable mountain roads can be. pic.twitter.com/wyVCpip3zy
— Nikhil saini (@iNikhilsaini) March 16, 2026
காரின் உள்ளே சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக மீட்ட பொதுமக்கள், பெரும் உயிர்ச் சேதத்தைத் தவிர்த்தனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “கடவுள் அருளால் தான் இவர்கள் உயிர் தப்பியுள்ளனர்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மலைப்பாதைகளில் பயணிக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
