புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வதில் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது பல இடங்களில் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, நபர் ஒருவர் மிகக் குறைந்த அளவு எரிவாயுவைப் பயன்படுத்தி பூரி சுடும் வித்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
इसको कहते हैं ईस्मार्ट कुकिंग 😋 pic.twitter.com/WdEXysAgS4
— मनप्रीत कौर❤मन💕 (@mannkaurr1) March 16, 2026
ஒரு அகலமான பாத்திரத்தின் நடுவில் எண்ணெய் நிரப்பப்பட்ட கண்ணாடியை வைத்து, அந்தப் பாத்திரத்தைச் சூடாக்குவதன் மூலம் கிளாஸில் உள்ள எண்ணெயை கொதிக்க வைத்து அதில் பூரி சுடுகிறார்.
இதன் மூலம் எரிவாயு மிச்சமாவது மட்டுமின்றி, மிகக் குறைந்த அளவு எண்ணெயே செலவாவதாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “என்ன ஒரு புத்திசாலித்தனம்!” என பாராட்டி வரும் அதே வேளையில், இது பாதுகாப்பானதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
எது எப்படியோ, செலவைக் குறைக்க இந்தியர் கண்டுபிடித்த இந்த நூதன முறை இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
