இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்தச் சந்திப்பின் போது அங்கிருந்த ஒருவர் சஞ்சு சாம்சனுக்கு இளநீர் கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால், சஞ்சு சாம்சன் அந்த இளநீரைத் தான் குடிக்காமல், உடனே பக்கத்தில் இருந்த முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மிகுந்த மரியாதையுடன் கொடுக்க முன்வந்தார்.

​முதலமைச்சர் பினராயி விஜயன் புன்னகையுடன் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதன் பின்னரே சஞ்சு சாம்சன் அந்த இளநீரைப் பருகினார். தான் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தாலும், ஒரு முதலமைச்சர் மற்றும் பெரியவர் என்ற முறையில் சஞ்சு காட்டிய அந்தப் பண்பு மற்றும் மரியாதை பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. “எளிமைக்கும் மரியாதைக்கும் சஞ்சு சாம்சன் தான் சிறந்த உதாரணம்” என ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.