சமீபத்தில் ஒரு பெண் வெயிலில் சென்ற சிறிது நேரத்திலேயே அவரது தோல் கடுமையாக எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் அவரது உடல் முழுவதும் பயங்கரமான கொப்புளங்களும் காயங்களும் ஏற்பட்டன. இதைப் பார்த்த மருத்துவர்கள் முதலில் இது ஒரு சாதாரண சூரிய ஒளி ஒவ்வாமை என்று கூறி அலட்சியப்படுத்தினர்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அந்த காயங்கள் ஆறாமல் மோசமடைந்ததால், தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் வெளிவந்த உண்மை அனைவரையும் உலுக்கியது அது வெறும் வெயில் பாதிப்பு மட்டுமல்ல, அவரது உடலில் இருந்த ஒரு அரிய வகை தோல் நோய் வெயிலினால் தூண்டப்பட்டு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண வெயில் என்று நாம் அலட்சியமாக நினைப்பது, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

இது குறிப்பாக, கடுமையான வெயிலில் செல்லும் போது போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த பெண்ணின் நிலை உணர்த்துகிறது. தற்போது அந்த பெண்ணுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்கள் இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.