தானே மாவட்டம் கல்யாணில் உள்ள ஆதார்வாடி சிறைச் சாலைக்கு வெளியே, சிறையில் உள்ள ஒரு கைதியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறை வளாகத்திற்கு மிக அருகிலேயே எவ்வித அச்சமுமின்றி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதோடு, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கைதிகளின் ஆதரவாளர்கள் பொது இடத்தில் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் உள்ள காவல்துறையின் கண்காணிப்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு இடத்தின் வாசலிலேயே இத்தகைய சட்டவிரோத செயல்கள் அரங்கேறியிருப்பது பாதுகாப்பு ஓட்டைகளைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மற்றும் விதிமுறைகளை மீறிய நபர்களைத் தேடி வருகின்றனர். இத்தகைய அத்துமீறல்கள் இனிவரும் காலங்களில் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.