டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சென்னை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு வீரர்களுக்கும் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் முதல்வர்.

​இந்தச் சந்திப்பின் போது, இந்திய டி20 அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி மற்றும் தொப்பியை முதலமைச்சருக்கு அந்த இரு வீரர்களும் பரிசாக வழங்கி நெகிழ்ச்சியூட்டினர். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்து வீரர்களின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டினார். தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் உலக அரங்கில் ஜொலிப்பது மாநிலத்திற்கே பெருமை எனப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.