சமீபத்தில் ஒரு மென்பொருள் பொறியாளர், தனது செல்லப் பிராணியான நாய்க்கு ஏற்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய விநோத நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாய்க்கு தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசியை’ உருவாக்க அவர் மற்றும் கூகுள் டீப்மைண்டின் ஆல்பாஃபோல்ட் ஆகிய கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் பொதுவாக மனிதர்களுக்கான மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் இந்த உயர்நிலைத் தொழில்நுட்பங்கள், ஒரு நாயின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டது மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்ப வல்லுநர், தனது நாயின் புற்றுநோய் உயிரணுக்களின் மரபணு வரிசையை ஆய்வு செய்ய புரத அமைப்புகளைத் துல்லியமாகக் கணிக்க ஆல்பாஃபோல்ட் மென்பொருளையும் பயன்படுத்தினார்.
இதன் மூலம் நாயின் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் வகையில் குறிப்பிட்ட தடுப்பூசியை வடிவமைத்தார். தற்போதைய மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் எவ்வாறு ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கும், சிக்கலான மருத்துவப் பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண இது எப்படி உதவும் என்பதற்கும் இந்த முயற்சி ஒரு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.
